பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்
மறுவாழ்வு மையத்துக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி
முன்வைத்த கோரிக்கையை ஏற்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையத்துக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மறுவாழ்வு மையம் அமைப்பது குறித்த பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் நாடு முழுவதும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். மாவட்ட தலைநகரங்களில் 600 இடங்களில் ரூ 477 கோடி செலவில் மறுவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மறுவாழ்வு மையம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் சட்டசேவைகளை வழங்கும் விதமாக அமைக்கப்பட உள்ளது. இந்த வசதிகள் தேசிய உதவி மையத்துடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் படானில் இரண்டு சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து மேனகா காந்தி, மறுவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்துள்ளார்.