மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற தகுதியுள்ள விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தேர்வு துவங்கியுள்ளதாக சி.இ.ஓ. மார்ஸ் தெரிவித்துள்ளார்.
சி.இ.ஓ. மார்ஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்தாண்டிற்கான மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கியுள்ளது.
மாவட்ட அரசு, நகராட்சி, நிதியுதவி, மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள ஆசிரியர்களில் விண்ணப்பிக்க விரும்புவோர் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளின் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் வரும் 25ம் தேதிக்குள் கருத்துருக்கள் நான்கு பிரதிகளில் புத்தக வடிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் எவ்வித குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாதவராகவும், பொது வாழ்வில் தூய்மை, சேவையில் நாட்டம், மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், சேர்க்கை தேர்வில் தேர்ச்சி சதவீதம் உயர்த்துதல், பின்தங்கிய மாணவர்களின் கல்வி தரம் முன்னேற்றம் காண்பித்தவராக இருக்க வேண்டும். இவ்வாறு சி.இ.ஓ. மார்ஸ் தெரிவித்துள்ளார்.