தமிழ்ப் பாடத்தேர்வு: மாணவர்களின் தோல்வியை தவிர்க்க ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்

 தமிழ்ப் பாடத்தில் தோல்வியை தவிர்க்க தமிழாசிரியர் களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ( 2013-14) கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
தமிழ் பாடத்தில் சிவகங்கையில் 923 பேர் உட்பட தமிழக அளவில் 63,417 மாணவ மாணவிகள் தோல்வியை தழுவினர். மாணவர்களின் தோல்வியை தவிர்க்க தமிழாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, சிவகங்கை கல்வித்துறை முடிவெடுத்தது. இதற்காக அனுபவமிக்க தமிழாசிரியர் குழு ஒன்றை சி.இ.ஓ. செந்திவேல் முருகன் ஏற்படுத்தியுள்ளார்.

இக்குழுவினர் மூலம் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு வினா விடை புத்தகம், கட்டாய வினாக்களுக்கு விடையளித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தமிழாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு காரைக்குடியிலும், சிவகங்கை கல்வி மாவட்ட தமிழாசிரியர்களுக்கு சிவகங்கையிலும் தமிழாசிரியர் குழுவினர் சி.இ.ஓ. பயிற்சி அளிக்கின்றனர். இப்புது முயற்சியை பிற மாவட்டத்திற்கும் பரவலாக்க செய்தால் பத்தாம் வகுப்பில் தமிழில் தேர்ச்சியை அதிகரிக்கலாம் என தமிழாசிரியர் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...