பார்வையற்ற மூன்று சிறுவர்களை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

 ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்களை, ஆசிரியர் பிரம்பால் மிருகத்தமான தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம்
காக்கிநாடாவில் கிரீன்பீல்டு ரெசிடென்ஷியல் பள்ளி என்ற பெயரில் பார்வை திறன் அற்ற மாணவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. இதில் 62 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இங்கு படிக்கும் 10 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்களை அந்த பள்ளியின் ஆசிரியர் பிரம்பால் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ நேற்று வெளியானது.

அதில் சிறுவர்களின் தலையை ஒரு கையால் பிடித்து கீழே குனிய வைத்து மற்றொரு கையால் அந்த ஆசிரியர் பிரம்பால் விளாசும் காட்சியும், பார்வையற்ற அந்த சிறுவர்கள் விட்டு விடும்படி கதறும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சிறுவர்களை அடிப்பதற்கு ஆசிரியருக்கு மற்றொரு நபர் உதவும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த ஆசிரியரும் பார்வையற்றவர் என கூறப்படுகிறது.

நேற்று அனைத்து டிவி சேனல்களிலும் இந்த கொடூர காட்சி ஒளிபரப்பாகி, பார்ப்பவர்களின் மனதை பதற வைத்தது. இதையடுத்து அந்த முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் காக்கிநாடா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...