நடுநிலைப் பள்ளி வரையிலான மாணவ மாணவியருக்கு செஸ் போட்டி நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி துறை சார்பில் அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகள், மாநகராட்சி, யூனியன் அளவிலான துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டும் அதுபோல் மாணவ மாணவியருக்கான செஸ் போட்டி நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
செஸ் போட்டி 21ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் நடத்தி முடித்து இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர் பட்டியலில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வரும் 24ம் தேதி செஸ் போட்டி நடக்க உள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு காலையிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு மதியமும் செஸ் போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர் யூனியன் அளவிலான போட்டியிலும், அதன் பின் மாவட்ட அளவிலான போட்டியிலும் பங்கேற்க தகுதி பெறுவர்.