மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.45 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடப்பு நிதியாண்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டசபையில் அவர் கூறியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் பள்ளியில் சேருவதை ஊக்குவிக்க, இடை நிற்றலை தவிர்க்க, கல்வியில் பின்தங்கிய 16 மாவட்டங்களில் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1994 - 95ல் செயல்படுத்தப்பட்டது.

கடந்த ஆட்சியில் இத்திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை. ஆண்டுக்கு 90 ஆயிரம் பேருக்கு 8 கோடி ரூபாய் மட்டும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வரானதும், இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

மூன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை 8ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் 4.83 லட்சம் பேருக்கு 42.75 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டத்தை செயல்படுத்த 45.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...