தமிழகத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சோலார் விளக்கு, முதலுதவி பெட்டி மற்றும் ஆயத்த பயிற்சி அளிக்கப்படும் - சட்டசபையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 96 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க் குழாய் ஆகியவற்றினை பராமரிக்க ஒரு பள்ளிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த துறையின் கீழ் மலைப்பகுதிகளில் இயங்கி வரும் 216 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில்
6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 13 ஆயிரத்து 154 மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக ஒரு மாணவருக்கு ரூ.550 மதிப்புள்ள ஒரு சூரிய எரிசக்தியுடன் கூடிய “சோலார்” விளக்கு வழங்கப்படும். ஆயத்த பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியரை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஒரு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் வீதம், 207 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பணம் அளிக்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள், ஐ.ஐ.எம். போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. போன்ற மேற்படிப்பில் சேர, பொது அனுமதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்து, தகுதியின் அடிப்படையில் அந்த தேர்வை எழுதுவதற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் ஆயத்த பயிற்சி அளிக்கப்படும். முதலுதவி பெட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக ஆயிரத்து 346 விடுதிகளுக்கும் 100 அரசு பழங்குடியின உண்டி உறைவிட பள்ளிகளுக்கும் தலா ஒரு முதலுதவி பெட்டி வழங்கப்படும். இந்த துறையின் கீழ் இயங்கும் 110 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 75 மேல்நிலைப்பள்ளிகளில் 32 ஆயிரத்து 112 மாணவிகள் படிக்கின்றனர். அவர்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு பள்ளிக்கு ஒரு “நாப்கின் பர்னர்” என்ற சுகாதார குட்டை தகளி வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...