பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத வகையில் இருக்கும் சிதிலமடைந்த கட்டடங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால், அரசுப் பள்ளிகளில்
கட்டமைப்பு நிலை சீர்குலைந்து வருகிறது.
பொது அறிவு, சமூகத்தில் புகழ், பிறரை மதிக்கும் பண்பு போன்ற அனைத்தையும் பெற்றுக்கொடுக்கும் உயர்ந்த செல்வம் கல்விச் செல்வமே. இன்று அனைவருக்கும் இச்செல்வம் கிடைக்க வழிவகை செய்வது அரசுப்பள்ளிகள்தான். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு குறையாக இருந்துவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் நலன்கருதி செயல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கல்வி கற்றுக்கொடுக்கப்படும் இடமான பள்ளிக்கூடங்கள், இன்று பாதுகாப்பில்லாமலும், அடிப்படை வசதிகள் அழிந்துவரும் அவல நிலையிலும் காணப்படுகிறது.
பள்ளியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுகிறது. பத்திற்கு ஒன்று என்ற கணக்கில் மட்டுமே பள்ளிகள் ஆய்வு செய்யப்படுகிறது. அவ்வாறு ஆய்வு நடத்தினாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. துவக்கப்பள்ளிகளில் ஆரம்பித்து மேல்நிலை வரை அனைத்து நிலை அரசு பள்ளிகளிலும், இப்பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது. இதுபோன்று பிரச்னை உள்ள அரசுப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
ஓட்டையான மேற்கூரையின் வழியாக, குழந்தைகளை உரசிப்பார்க்கும் மழைச்சாரல் விழும் வகுப்பறைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எந்த நேரத்தில் எந்த வகுப்பறை இடிந்து விழுமோ என்ற பயத்துடேனேயே நாள்தோறும் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். வகுப்பறையில் கல்வி, நண்பர்களோடு ஒன்றாக கூடி விளையாடுதல் போன்ற இன்பங்களை மட்டுமே எண்ணி, பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளை பலியாக்க காத்திருக்கிறது சில சிதிலமடைந்த பள்ளிக்கூடங்கள்.
கிராமப்புற பள்ளிகள்தான் இவற்றில் முதன்மையானது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் பொறுப்பேற்காதவாறு அமைந்திருக்கும் சிதிலமடைந்த வகுப்பறைகள், பழுதடைந்த குடிநீர் தொட்டி, விளையாட வசதியில்லாத பள்ளி மைதானம், சுற்றுச்சுவர் இல்லாத வளாகம் போன்றவை பெரும்பாலும் காணப்படுவது கிராமப்புற பள்ளிகளில்தான்.
இதுதவிர அரசுப்பள்ளிகள் மது அருந்துபவர்களின் இலவச மதுக்கூடமாகவும் பயன்படுகிறது. இப்பிரச்னைகளால் பெரும் விபத்துகள் ஏற்படும் போது மட்டுமே, இதுபோன்ற பள்ளிகளின் மீது அரசிற்கு கவனம் செல்கிறது. அதுவும், தற்காலிகமாகவே தவிர, நிரந்தர தீர்வாக இருப்பதில்லை. உடுமலை சுற்றுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் படிக்கின்றனர். பள்ளிகளின் கட்டமைப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மூலமாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் அமைக்காவிடிலும், இருக்கும் வகுப்பறைகளை மேம்படுத்தினாலே போதும் என்ற நிலையில் உள்ளன பல அரசு பள்ளிகள்.
பெற்றோர் கூறியதாவது: உடுமலை மட்டுமின்றி, ஒரு கல்வி மாவட்டத்திற்கே பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்நிலையில்தான் உள்ளன. கல்வித்தரத்தில் உயர்ந்து வரும் அரசு பள்ளிகள் கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளின் வளர்ச்சி முழுமையடையும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கு பள்ளியின் மீது ஈடுபாடு ஏற்படும்.
கூடுதல் வசதிகளை அமைப்பதை விட இருக்கும் வசதிகளை முதலில் மேம்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் குழந்தைகளின் எதிர்கால கனவுகள் நனவாக, பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற எண்ணம் மறைந்து, இன்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடுமோ என எண்ணியே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் நிலையில்தான் பல பெற்றோர் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.