குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, சுடுகாட்டில் சமையல் செய்து, குருமன்ஸ் இன மக்கள், தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குருமன்ஸ் இன மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு, எஸ்.டி.,க்கான ஜாதி சான்றிதழ் கேட்டு, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, கலெக்டர் மற்றும் முதல்வருக்கு, பல கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, அரசு சார்பில் வழங்கப்படும் எவ்வித சலுகைகளையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனக்கூறி, குருமன்ஸ் இன மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக, அறிவித்திருந்தனர். இதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் நடத்த வந்தவர்களை, போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
ஆத்திரமடைந்த குருமன்ஸ் இன மக்கள், பள்ளிக்கு அனுப்பியிருந்த தங்கள் பிள்ளைகளை சீருடையோடு அழைத்து வந்து, சுடுகாட்டில் அமரவைத்து போராட்டம் நடத்தினர். அப்போது குருமன்ஸ் இன மக்களும், அவர்களது பிள்ளைகளும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அங்கேயே தங்கி, நூதன போராட்டம் நடத்தினர்.
விரைந்து வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து செல்வதில்லை என அவர்கள் திட்டவட்டமாக, அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.