மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்து ஆபத்தை எதிர் கொள்கின்றனர். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார்கள்.
இதை தடுப்பதற்காக பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– ‘‘பஸ் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தடுப்பதற்கான அனைத்து முன் நடவடிக்கைகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் போதனைகள் வழங்க வேண்டும். பள்ளி தொடங்கும் முன் மாணவர்கள் கூடும் (அசம்பிளி) நேரத்தில் இதுபற்றி மாணவர்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும். பஸ் படிக்கட்டு பயணம் ஆபத்தானது என்பதை எடுத்து கூறும் வகையில் நீதிபோதனை வகுப்பில் எடுத்துரைக்க வேண்டும். போக்குவரத்து சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் இவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் வரக்கூடாது என்று சமீபத்தில் பள்ளி கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.