பொன்னேரி அரசு கலை கல்லுாரியில், மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை இல்லை என கூறி, மாணவர்களின் பெற்றோருக்கு ஆதரவாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர்
சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அரசு கலை கல்லுாரி யில், 1,140 இடங்களுக்கு, மூன்று கலந்தாய்வுகள் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு கலந்தாய்வுகள் வெளிப்படையாக நடந்ததாகவும், அதன் மாணவர் சேர்க்கையில், வெளிப்படை தன்மை இல்லை எனவும் கூறப்படுகிறது. தாமதமாக விண்ணப்பம் பெற்ற, 300 பேருக்கு சேர்க்கை குறித்து, எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.
சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள், பெற்றோருடன் தினமும் கல்லுாரிக்கு வந்து சென்றனர்.மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை இல்லை எனக் கூறி நேற்று, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர், கல்லுாரி முன்புறம் உள்ள பொன்னேரி - -திருவொற்றி யூர் மாநில நெடுஞ்சாலையில், திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், பங்கேற்றனர். சாலை மறியல் போராட்டத்தின்போது, கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அதில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரை கடிதங்களுடன் வருபவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கி, சேர்க்கை நடைபெற்று உள்ளது. கடந்த ஒரு மாதமாக, சேர்க்கைக்கு காத்து இருக்கும் மாணவர்களின் பெற்றோர், அலைந்து திரிந்தும், கலந்தாய்வு குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை என, கூறப்பட்டு உள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர் களிடம், பொன்னேரி ஆர்.டி.ஓ., மேனுவல்ராஜ், டி.எஸ்.பி., எட்வர்ட் ஆகியோர் சமாதானம் பேசினர். அதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.