ஒன்பது ஆண்டுகளாக, பிளஸ் 1, பிளஸ் 2 .பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம்...!

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது. கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன. ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. அரசின் ஒப்புதலுக்கு...:இதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்து முடித்ததும், தமிழக அரசின் ஒப்புதலுக்கு, கல்வித் துறை, கோப்பை அனுப்பியது. பல மாதங்கள் ஆகின்றன; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.நடப்பு கல்வி ஆண்டில் (2014 - 15), பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டு (2015 - 16), பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.பணிகள் முடியாததால், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), பிளஸ் 1 பாடத் திட்டமும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2016 - 17) பிளஸ் 2 பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என, பின்னர் அறிவிக்கப்பட்டது. வரைவு பாடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின், பாடங்களை எழுதுவதற்கான குழுக்களை ஏற்படுத்தி, பாடங்கள் எழுத வேண்டும். இதற்கு, ஒரு ஆண்டு முழுமையாக தேவைப்படும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.இது குறித்து, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்த ஆசிரியரில், ஒருவர் கூறியதாவது:பாடத் திட்ட தயாரிப்பு பணிகளை, மற்ற பணிகளைப் போல், வேகமாகச் செய்ய முடியாது. சிறிய தவறுகள் வந்தாலும், அது, மாணவர்கள் மத்தியில், தவறான கருத்துக்களை கற்பிப்பது போல் ஆகிவிடும்.வரைவு பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், ஆறு மாதங்களுக்கு மேலாக இழுபறி உள்ளது. இதைப் பற்றி, முதல்வரிடம் எடுத்துக் கூற, அதிகாரிகள் தயங்குகின்றனர். முதல்வரிடம், விவரத்தை தெரிவித்தால், அவர், உடனடியாக ஒப்புதல் அளிப்பார்.நெருக்கடி கொடுத்தால்...:பாடத் திட்டங்களை எழுத, குறைந்தபட்சம், ஒரு ஆண்டு தேவைப்படும். எழுதி முடித்த பின், பிழைகள் பார்ப்பது உள்ளிட்ட, பல பணிகள் உள்ளன. எனவே, இனிமேல், தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும், எங்களது பணியை,முழுமையாகச் செய்ய முடியாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...