அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய பொது கவுன்சிலிங், ஆகஸ்ட் 4ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் 1,02,510 பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.
சமீப காலங்களில்,
ஆண்டுக்கு ஆண்டு, நிரம்பாமல் காலியாக இருக்கும் பொறியியல் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இந்தாண்டு அந்த காலியிடங்களின் எண்ணிக்கை, எப்போதுமில்லாத அளவிற்கு 1 லட்சத்தையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.
பொறியியல் படித்தவர்களுக்கு, வேலையில் சேர்வதற்கு ஏற்ற தகுதிகள் இருப்பதில்லை மற்றும் படித்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளில், மிகக்குறைந்த சதவீத பட்டதாரிகளே பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் உள்ளிட்ட பிரச்சினைகளால், ஆங்காங்கே கட்டி வைத்துக்கொண்டு, காசு பார்க்க காத்திருந்த ஏராளமான சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் பக்கம், மாணவர்களும், பெற்றோர்களும் திரும்பி பார்க்கவில்லை.
சமீபகாலமாக, பல பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா காண்பதும், விற்பனைக்கு வருவதுமான செய்திகளை நாம் படித்திருப்போம். தமிழகத்தில் மட்டும், தற்போதைய கணக்கின்படி, அங்கீகரிக்கப்பட்ட 507 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலிங்கிற்கு வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே, அந்த 507 கல்லூரிகளையும் சேர்த்து, மொத்தம் 1,01,705 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன என்பதை கவனிக்கவும். மற்றபடி, அந்த சுயநிதி கல்லூரிகளில், கவுன்சிலிங்கிற்கு வழங்காமல், 60 ஆயிரம் இடங்களுக்கும் மேல் இருக்கும்.
அந்த இடங்களை நிரப்ப ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் இருப்பினும், குறைந்தளவே நிரம்பும் என்பது நிச்சயம். பொதுக் கவுன்சிலிங் முடிந்துவிட்ட நிலையில், துணைநிலை கவுன்சிலிங் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகியவை இனிமேல் நடைபெறவுள்ளது. அதிலும் பெரியளவில் இடங்கள் பூர்த்தியாக வாய்ப்பில்லை. எனவே, எப்படி பார்த்தாலும், தமிழகத்தில், இந்தாண்டு காலியாக இருக்கும பொறியியல் இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறையாது என்பது நிச்சயம்.
சுயநிதி கல்லூரி தவிர, அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல மையங்கள் என்று மொத்தம் 13 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 802 இடங்கள் காலியாக உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் 3 இடங்கள் மட்டும் நிரம்பவில்லை.
மற்றபடி, அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் காரைக்குடியிலுள்ள CECRI மற்றும் சென்னையிலுள்ள CIPET ஆகியவற்றில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.
தற்போதைய நிலவரம் குறித்த ஒரு அட்டவணை விபரம்
பிரிவு
கல்லூரி எண்ணிக்கை
மொத்த இடம்
ஒதுக்கீடு
காலியிடம்
அண்ணா பல்கலை
3
2570
2570
0
உறுப்பு கல்லூரிகள்/மண்டல மையங்கள்
13
5520
4718
802
அரசுக் கல்லூரிகள்
10
3760
3757
3
அரசு உதவிபெறும் கல்லூரிகள்
3
2223
2223
0
CECRI மற்றும் CIPET
2
155
155
0
சுயநிதி கல்லூரிகள்
507
197361
95656
101705
மொத்தம்
538
211589
109079
102510
(இந்த விபரம் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகள் தொடர்பானது மட்டுமே)