இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தமிழகத்தில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு-இ பேப்பர்

தமிழக அளவில் 2009க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் 17 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாக ஆசிரியர் சங்க மாநில செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
சேலத்தில் நடந்தது. இதற்கு பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமை வகித்தார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:
தமிழக அளவில் இடைநிலை ஆசிரியர்களின் நியமன தேதியை கணக்கில் கொண்டு மூன்று விதமான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான கல்வித்தகுதி மற்றும் ஒரே விதமான பணிக்காக வழங்கப்படும் ஊதியம் வேறுபட்டுள்ளது.
1999ம் ஆண்டு வரை நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ9,300, தர ஊதியம் ரூ4,300 வழங்கப்பட்டு வருகிறது. 1999 முதல் 2009 வரை நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ8370, தரஊதியம் ரூ2,800 வழங்கப்பட்டு வருகிறது. 2009க்கு பின்னர் மாநில பதிவு மூப்பு மற்றும் தகுதித் தேர்வின் மூலம் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்றவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ5,200, தர ஊதியம் 2,800 மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக அளவில் 17 ஆயிரம் ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியம் பெற்று வருகின்றனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையில் உள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 ஆசிரியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களது பணி நியமனத் தேதியை கணக்கிடாமல் அவர்களது குடும்பத்திற்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கட்டாயக்கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு தொடக்கப் பள்ளியும், 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு நடுநிலைப் பள்ளியும் இருக்குமாறு அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...