நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவியை, ராகிங் செய்து தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக 12 மாணவிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை
சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் மான்சிதேவி, 20. இவர், திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் 2 ம் ஆண்டு பயில்கிறார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வரும் மான்சிதேவி, நேற்றுமுன்தினம் மாலையில் கல்லூரி வளாகத்தில் நின்று, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, 4 ம் ஆண்டு பயிலும் மாணவிகள் அவரை, கேலி கிண்டல் செய்தனர். மேலும், கன்னத்தில் தாக்கி, ராகிங் செய்துள்ளனர். காயம்பட்ட மாணவி மான்சிதேவி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகாரின் பேரில் ஐகிரவுண்ட் போலீசார் சட்டக்கல்லூரி மாணவிகள் புஷ்பலதா, கிருத்திகா, பேச்சியம்மாள் உட்பட 12 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.