வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த, 14 மாணவர்களுக்கு, துயர் துடைப்பு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வீதம், 7 லட்ச ரூபாய்க்கான சேமிப்பு பத்திரங்களை, ஆட்சியர் வீர ராகவ ராவ் வழங்கினார்.
திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, தமிழக அரசின் துயர் துடைப்பு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை வகித்து, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில், வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்துவிட்ட மாணவர்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 14 மாணவர்களுக்கு 7 லட்சம் ரூபாய்க்கான சேமிப்பு பத்திரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அறிவழகன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பரசுராமன், ரங்கன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.