163 பாடப் பிரிவுகள் அறிமுகம்
தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் பொருட்டும், கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியர் உயர் கல்வி பெறும் பொருட்டும்,
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 797 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்பாடப் பிரிவுகளில் 10,204 மாணவ மாணவியர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர். இதன் காரணமாகவும், மொத்த சேர்க்கை விகிதம் 38.2 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று 2014-15 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 26 இளங்கலை பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில் பாடப் பிரிவுகள் மற்றும் 52 பி.எச்.டி. பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், உயர் கல்வி வளம் அடைவதோடு தமிழ்நாடும் வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.