இந்த ஆண்டின், சிவில் சர்வீசஸ் தேர்வு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி, ஆகஸ்ட் 24ல் நடைபெறும். சிசாட் கேள்வித்தாள் மாற்றம் தொடர்பாக, அனைத்து தரப்பினரிடமும் விவாதித்து, தக்க முடிவு எடுக்கப்படும்
என, மத்திய அரசு தெரிவித்தது.
சிசாட் விவகாரம்: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வின், முதல் நிலை தேர்வில், சிசாட் எனப்படும் கேள்வித்தாளில் ஆங்கிலம் அதிகமாக இருப்பதால், பிற மொழிகளில் படித்தவர்களுக்கு, அந்த தேர்வை எழுதுவதற்கு சிரமமாக உள்ளதாக மாணவர்கள் சிலர், சில மாதங்களாக போராடி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, ராஜ்யசபாவில் நேற்று உறுப்பினர்கள் காரசாரமாக பேசினர். இந்த ஆண்டின் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும்; கேள்வித்தாளில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரினர்.
அதற்கு பதிலளித்து, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்த ஆண்டில், தேர்வை தள்ளி வைப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, திட்டமிட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்ட் 24ல் தேர்வு நடைபெறும்.
அவசரம் வேண்டாம்: பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததும், இந்த விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறியப்படும்; அதன்படி தக்க முடிவெடுக்கப்படும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
ஆகஸ்ட் 24க்கு முன், இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் கோரிக்கையை நிராகரித்து, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், "இந்த விஷயத்தில் தடாலடியாக முடிவெடுக்க முடியாது. நிதானமாகத்தான் முடிவெடுக்க வேண்டும் என, எம்.பி.,க்களில் இரு தரப்பினரும் கருதுகின்றனர். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகுதான், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்" என்றார்.
இந்த விவாதத்தில், அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, ஐக்கிய ஜனதாதளத்தின் சரத் யாதவ், திரிணமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரையன் போன்ற எம்.பி.,க்கள் பேசினர்