மைதானம் இல்லாததால் புதிய விளையாட்டில் மாணவர்கள் ஆர்வம்

மதுரையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கும், பயிற்சி பெறுவதற்கும் மைதானம் இல்லாததால், புதிய விளையாட்டுகளின் மீது கவனத்தை திருப்புகின்றனர்.

மதுரை கல்வி மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி
அரசுப் பள்ளிகள், உசிலம்பட்டியில் சேடப்பட்டி, உசிலம்பட்டி, சேக்கிப்பட்டி பள்ளிகள், மேலுாரில் மேலுார், கொட்டாம்பட்டி அரசுப் பள்ளிகள் என, விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மைதானங்கள் உள்ளன. பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில் மைதானங்களே இல்லை.

இதனால் தடகளப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்க முடியவில்லை. பள்ளியை ஒட்டிய தெருக்களிலும், கோயில் இடம், புறம்போக்கு இடங்களில் கபடி, கோகோ, வாலிபால் போன்ற குழுவிளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி பெறுகின்றனர். பெயருக்கு இருக்கும் மைதானங்களிலும் தடகள ட்ராக் வசதியில்லை. இதனால் மாணவர்களின் கவனம், புதிய விளையாட்டுகளின் மீது திரும்பியுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெற வேண்டுமென அரசு நினைக்கிறது. அதற்கான அடிப்படை வசதிகளை செய்யவில்லை. எனவே பத்துக்கு பத்தடி அறையில் விளையாடக்கூடிய டேக்வாண்டோ, செஸ், கேரம், குத்துச்சண்டை, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்கிறோம். இப்போட்டிகளில் மாணவர்களும் பதக்கங்களைப் பெறுகின்றனர்.

அரசுப் பள்ளிக்கு அருகில் காலியிடம் இருந்தால், அதை மைதானமாக மாற்றலாம். மைதானத்தை சீரமைப்பதற்கும், விளையாட்டுக் கருவிகள் பழுதடைந்தால் சரிசெய்வதற்கும் நிதியில்லை. ஸ்குவாஷ் போட்டியை விளையாடுவதற்கு மதுரையில் உள்ளரங்கமே இல்லை. எனவே, கல்வி மாவட்டம் வாரியாக, தலா ஒரு அரசுப் பள்ளியில் ஸ்குவாஷ் உள்ளரங்கு அமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...