பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை 30 நாள்களுக்குள் முடித்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திண்டிவனம் ஜி.என்.ஜி. சாலை ஆட்டோ தொழிலாளர் நலச் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
திண்டிவனத்தில் பொதுக் கழிப்பிடம் அமைந்துள்ள பகுதியின் அருகே அம்மா உணவகம் கட்டப்படுகிறது. வேறு இடத்தில் உணவகம் அமைப்பதற்கு உத்தரவிடக் கோரி திண்டிவனம் நகராட்சி ஆணையரிடம் கடந்த ஜூன் மாதம் மனு அளித்தோம்.
ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, நாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்குரைஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி ஆஜராகி, மனுதாரர் அளித்த கோரிக்கை மனு ஒரு மாதத்துக்குள் முடித்து வைக்கப்படும் என தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இதுபோன்று வரும் கோரிக்கை மனுக்களை 30 நாள்களுக்குள் முடித்து வைக்க வேண்டும். அது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லையெனில், கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான காரணத்தை மனுதாரருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது