பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பொதுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:



பிளஸ் 2 தேர்வு அட்டவணை

செப்டம்பர் 15    திங்கள்கிழமை    மொழிப்பாடம் முதல் தாள்

செப்டம்பர் 16    செவ்வாய்க்கிழமை    மொழிப்பாடம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 17    புதன்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்

செப்டம்பர் 18    வியாழக்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 19    வெள்ளிக்கிழமை    கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், உணவு மேலாண்மை - குழந்தைகள் நலன், விவசாயம்,

அரசியல் அறிவியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், நர்ஸிங்

செப்டம்பர் 22    திங்கள்கிழமை    வணிகவியல், மனையியல், புவியியல்

செப்டம்பர் 23    செவ்வாய்க்கிழமை    இயற்பியல், பொருளாதாரம், நில வரைபட

தயாரிப்பு, கணக்குப் பதிவியல் - தணிக்கை, அலுவலக நிர்வாகம்

செப்டம்பர் 24    புதன்கிழமை    தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

செப்டம்பர் 25    வியாழக்கிழமை    வேதியியல், கணக்குப் பதிவியல்

செப்டம்பர் 26    வெள்ளிக்கிழமை    உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்



பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை



செப்டம்பர் 17    புதன்கிழமை    மொழிப்பாடம் முதல் தாள்

செப்டம்பர் 18    வியாழக்கிழமை    மொழிப்பாடம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 19    வெள்ளிக்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்

செப்டம்பர் 22    திங்கள்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 24    புதன்கிழமை    கணிதம்

செப்டம்பர் 25    வியாழக்கிழமை    அறிவியல்

செப்டம்பர் 26    வெள்ளிக்கிழமை    சமூக அறிவியல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...