6 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்.30ம் தேதி வரை மாணவர் சேர்க்கலாம்...

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த கால அவகாசம் வழங்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குனரின் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு பொதுவாக ஜூலை 31ம் தேதி வரை ஆகும். எனினும் 201415ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து ஆணையிடப்படுகிறது. இந்த உத்தரவை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து மாணவர் சேர்க்கை சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆய்வு அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...