ஆகஸ்ட் 6-ல் பொறியியல் துணைக் கலந்தாய்வு..!

பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி பொறியியல் துணைக் கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் பதிவு செய்ய வேண்டும். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம்
நடத்தி வருகிறது. ஜூலை 7-ஆம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களில், பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதற்கான பொறியியல் துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய வரும் விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், பிளஸ்-2 தேர்வுக் கூட நுழைவு சீட்டு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ், பூர்வீக குடியிருப்புச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்று (தேவைப்படுவோர்) மற்றும் உறுதியளிப்புப் படிவம், தேசிய கட்டடக் கலை நுண்ணறி தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு அனுமதி கடிதம், புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களை http://tnea.annauniv.edu/tnea2014/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...