சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 200 அடி தேசியக் கொடியுடன் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
நாடு முழுவதும் 68-ஆவது சுதந்திரதினம் வரும்
வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதைக் கொண்டாடும் விதமாக சென்னை சௌகார்பேட்டையில் உள்ள எஸ்.ஜே.டி.சுரானா ஜெயின் வித்யாலய பள்ளியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 200 அடி தேசியக் கொடியை இருபுறமும் தாங்கியபடி சௌகார்பேட்டையில் உள்ள வால்டாக்ஸ் சாலை, யானைக்கவுனி தெரு, தங்க சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக புதன்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த ஊர்வலத்தின்போது "தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்', "பெண் சிசுக் கொலையைத் தடுக்க வேண்டும், "உணவை வீணாக்கக் கூடாது',"மரம் வளர்ப்போம்- மழை பெறுவோம்' என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 200 அடி தேசியக் கொடியை எஸ்.ஜே.டி.சுரானா வித்யாலய பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் வடிவமைத்திருந்தனர்.
இதில் பள்ளியின் தாளாளர் ஆனந்த் சுரானா, முதல்வர் உமா உள்பட பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டன