பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முழுநேர ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஒரு குழந்தைக்கான உணவுச் செலவை ரூ. 5 ஆக உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி மையங்களை தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆகஸ்ட் 11-ஆம் தேதி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரத்துக்கான இந்தப் போராட்டத்தை தடுப்பு வேலி அமைத்து, தடியடி நடத்தி தடுக்க காவல்துறை முனைந்துள்ளது. விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் தலைவர்களையும், போராட்டத்தை வாழ்த்திப் பேச வந்த சிஐடியு தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஊழியர் சங்கங்களின் தலைவர்களின் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டுள்ளனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்: கல்வி நிறுவனங்களில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும், கல்வி நிலையங்களில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி பல்கலைக்கழகங்கள் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.
இதில் பங்கேற்ற மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி திருச்செங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே உறுப்பினர் பதிவு செய்தபோது இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு தாக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை.
ஜனநாயகரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்