தண்டனையை இரத்து வேண்டும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கல்வி அதிகாரி மேல்முறையீடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

தஞ்சை மாவட்டம்,
கும்பகோணத்தில் இயங்கி வந்த, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சம்பவத்தின்போது மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த பாலாஜிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து பாலாஜி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்புதான், தஞ்சை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளில் இருந்து என்னை விடுவித்துள்ளது.

நீதிமன்றத்தில் அபராதத் தொகையைச் செலுத்தி விட்டேன். பள்ளி அங்கீகாரம் தொடர்பாக நான் சமர்ப்பித்த ஆவணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனக்கு வரும் புகார் மனுக்களை உயர் அதிகாரிகள் பார்வைக்கு அனுப்பி விடுவேன்.

எனவே, பள்ளியின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறுவது தவறானது. நான் கடமையைச் செய்யத் தவறி விட்டதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடமையில் இருந்து தவறியது கிரிமினல் குற்றமாகாது. வேறு அலுவலர்கள் தான் பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். எனவே, எனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டது. மனுவுக்கு பதிலளிக்குமாறு கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...