வங்கிகளில் பெண் ஊழியர்கள் விரும்பும் இடங்களுக்கு பணியிட மாற்றம்

பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணியிட  இடமாறுதல்

பெறுவதற்கு வசதியாக புதிய கொள்கையை வகுக்குமாறு வங்கி நிர்வாகங்களுக்கு
மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் வங்கி பெண் ஊழியர்கள், அவர்களது கணவர் வேலை பார்க்கும் பகுதிக்கு அருகிலோ அல்லது அவர்களது பெற்றோர் வசிக்கும் பகுதிக்கு அருகிலோ இடமாறுதல் பெறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி சேவைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்கள், திருமணமாகாத பெண் ஊழியர்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொள்வதுடன், பாதுகாப்பற்ற சூழலை உணருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு பெண் ஊழியர்கள் தாங்கள் விரும்பும் பகுதிக்கு இடமாறுதல் பெறுவதற்கும், புதிதாக நியமிக்கப்படும் பெண் ஊழியர்கள் தாங்கள் விரும்பும் இடத்தை தேர்ந்தெடுப்பதற்கும் வசதியாக புதிய கொள்கையை வகுக்கும்படியும், இதை உடனடியாக செயல்படுத்துமாறும் வங்கி நிர்வாகங்களிடம் நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பெண் ஊழியர்களின் சிரமங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று நிதி சேவைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...