உயர் கல்வி வரை தமிழ் மொழியை கல்வி மொழியாக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் மொழியை கல்வி மொழியாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டுக் கல்வி இயக்க தொடக்க மாநாட்டில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அரசு, தனியார் துறைகளின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழிப் படித்தோருக்கே முன்னுரிமை கொடுத்து, 80 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகப் பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வைக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மழலையர் பள்ளிகளை அரசே நடத்த வேண்டும். மழலை வகுப்புகள் உள்ளிட்ட தாய்த்தமிழ் வழிப் பள்ளிகள் அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி வரை தமிழ்வழியில் படித்தோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து உயர் கல்வியிலும் தமிழ் வழி படித்தோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர் கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழகத்தில் தமிழிலேயே கேள்வித்தாள் தந்து, தமிழிலேயே எழுதும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...