சிறப்பாக செயல்படக்கூடிய இளம் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அரசுப் பள்ளிகளில் குறைவாக உள்ளது

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் ஆங்கிலவழிக் கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் 199, அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் 5, அரசு நடுநிலைப் பள்ளி 1, நகராட்சி நடுநிலைப் பள்ளி 1, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் 4 என மொத்தம் 210 நடுநிலைப் பள்ளிகளும், 1,186 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.

தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் ஆங்கில வழிக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆங்கிலவழிக் கல்வி திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 2012-13 கல்வி ஆண்டு முதல், இத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டில், 5 பள்ளிகளில் 53 மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அடுத்த கல்வியாண்டில், இந்த எண்ணிக்கை 1,606ஆக உயர்ந்தது. நிகழாண்டில் (2014-15) 2,417 மாணவர்கள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

தங்கள் குழந்தைகளும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணம், ஆங்கிலவழிக் கல்விக்கு ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே, ஆங்கிலவழிப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், கற்பிக்கும் திறனில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

NOTE 1 : இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: தற்போதைய சூழ்நிலையில் சிறப்பாக செயல்படக்கூடிய இளம் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அரசுப் பள்ளிகளில் குறைவாக உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, ஆங்கிலவழிக் கல்விக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

NOTE 2: அதன்படி, அடுத்த கல்வியாண்டு முதல், இளம் ஆசிரியர்களோடு ஆங்கில வழிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் ஆங்கிலக் கல்வியின் தரம் உயரும்போது, மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவிடும். இதன்மூலம், வீதிக்கு வீதி பள்ளிகள் தொடங்கி கட்டண வசூல் நடத்தும் தனியார்களின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

பிரபல பள்ளிகளின் வாசலில் அதிகாலை முதல் காத்து நிற்க வேண்டிய நிலையும், குழந்தைகளின் சேர்க்கைக்காக தேர்வு எழுத வேண்டிய நிலையும் பெற்றோர்களுக்கு ஏற்படாது....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...