தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினால் குண்டர் சட்டம்

தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை
மது விலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இப்போது கணினி வழியிலான குற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்த குற்றச் செயல்கள் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சத்தை அளிக்கும்

வகையில் மிகவும் பலமிக்கதாக இருக்கிறது.

ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினியில் இருந்து தகவலை எடுப்பவர்களாலும், கணினி குற்றவாளிகளால் வணிகங்கள், அரசின் செயல்பாடு பாதிக்கக் கூடியதாகவும்,

ஸ்தம்பிக்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே, குண்டர் சட்ட வரம்புக்குள் கணினி வழியிலான குற்றச் செயல்களைச் செய்பவர்களையும் சேர்ப்பதற்கு வகை செய்ய திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

பாலியல் குற்றச் செயல்கள்: இதேபோன்று, பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் குண்டர் தடுப்புச் சட்டத்துக்குள் கொண்டு வரும் மற்றொரு மசோதாவையும் விசுவநாதன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு கள்ளச் சாராயக்காரர்கள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபசாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தும் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பாளர்கள் ஆகியோர் வரிசையில் இப்போது தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துவோர், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...