சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 68 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் சுமார் 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஒரு சத்துணவு அமைப்பாளர் 5-க்கும் அதிகமான மையங்களை கண்காணிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிறார். எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர்.
சத்துணவுக்கு தனித் துறை, வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி மையங்களை சில இடங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை தவிர்க்க வேண்டும், பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், சட்டப்பூர்வமான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாதாந்திர ஓய்வூதியம், பதவி உயர்வு ஆகியவை அளிக்கப்பட்டன.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, ஒரு சுமூகமான முடிவுகண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.