பிரிட்டனின் அதிபுத்திசாலி என பெயரெடுத்த இந்திய வம்சாவளி மாணவர்

 பிரிட்டனில் வாழும், இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர், தனது முக்கியப் பாடங்களில், வாரிய அளவில், 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதன்மூலம், பிரிட்டனின் அதிபுத்திசாலி மாணவர் என்ற
பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த மாணவரின் பெயர் அசனிஷ் கல்யாணசுந்தரம். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை ஆகிய பாடங்களில், மிக அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

18 வயது நிரம்பிய இந்த மாணவர், தனது மதிப்பெண்கள் குறித்து மகிழ்ச்சியடையவதாய் கூறியுள்ளதுடன், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சேர்ந்து, மருத்துவம் படிக்கப்போவதாய் கூறியுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர்வதைப் பற்றி இவர் யோசித்து வந்தாலும், மருத்துவத்தில், எந்த துறையில் specialize மேற்கொள்வது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

இந்த மாணவர், சமீபத்தில், Duke of Edinburgh&'s Gold Award என்ற விருதைப் பெற்றார். மேலும், வரும் நவம்பர் மாதம், லண்டனிலுள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில், பிரிட்டன் அரசி எலிசபெத்தின் கணவர் பிலிப்பிடமிருந்து ஒரு விருதைப் பெறவுள்ளார்.

மேலும், தங்க விருது பெற்றவர்களுக்காக நடத்தப்படும் ஒரு விழாவில் பங்கேற்க, லன்காஷைர் கவுன்டி கவுன்சிலால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...