மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில், முதல் நிலை தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தலா 200 மதிப்பெண் கொண்ட 2 கட்டாய தாள்கள் இடம் பெறுகின்றன.
ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 2 மணி நேரம் வழங்கப்படுகிறது.
இதில் பார்வையற்ற பயனாளிகளின் வசதிக்காக ஒரு மணி நேரத்துக்கு, கூடுதலாக 20 நிமிடம் வீதம் ஒரு தேர்வுக்கு 40 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த கூடுதல் நேரம் 2 தேர்வுகளிலும் வழங்கப்படும் என யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு டெல்லி ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின் படி வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 2–ம் தாளில் கேட்கப்படும் ஆங்கில திறனறி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என பயனாளிகளை யு.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திறனறி தேர்வை ரத்து செய்யுமாறு கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது