சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவு

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்டுள்ளார்.


மத்திய அரசுப் பணியாளர், பயிற்சித் துறை இயக்ககத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, இந்த உத்தரவை அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, ஐ.ஏ.எஸ். போன்ற உயரதிகாரிகள் தங்களது ஆண்டு சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வகை செய்திடும் தனி சட்டப்பிரிவு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2013-14-ஆம் நிதியாண்டுக்கான சொத்து விவரப் பட்டியலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு, மத்திய அரசுப் பணியாளர், பயிற்சித் துறை இயக்ககம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று கடிதம் எழுதியது. இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினரிடம் உள்ள மனைகள், நகை, பணம் உள்பட அசையும், அசையா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அதற்கான பிரத்யேக படிவங்களும் தமிழக அரசின் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்து விவரக் கணக்குகளை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...