தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே 2-ஆம் வகுப்பு மாணவரின் கண் பாதிக்கப்படக் காரணமாக இருந்த தனியார் பள்ளி ஆசிரியை, சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அந்தப் பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.
கும்பகோணம் அருகே, திருப்புறம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சி.இளமாறனை, அந்தப் பள்ளி ஆசிரியை அருள்ஜோதி இரும்பு ஸ்கேலால் தாக்கியதில் மாணவரின் வலது கண் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாணவரின் பெரியப்பா குமார் அளித்த புகாரின்பேரில், சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாகிவிட்ட ஆசிரியை அருள்ஜோதியை தேடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ச.கண்ணையன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பேபி ஆகியோர் சம்பவம் குறித்து சனிக்கிழமை விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியை அருள்ஜோதி இரும்பு ஸ்கேலால் மாணவரை அடித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து கண்ணையன் உத்தரவிட்டார். மேலும், பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்தார்.
கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்து, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.