வங்கிக் கணக்குகள் தொடங்குவோருக்கு நிதி சார்ந்த சேவை எளிதில் கிடைக்கும்

பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குத் தொடங்குவோருக்கு நிதி சார்ந்த அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் என மத்திய கனரக தொழில் துறை மற்றும் பொது தொழில் துறை இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் மாவட்ட வங்கி வளர்ச்சி ஆலோசனைக் குழு சார்பில் பிரதமர் மக்கள் நிதித் திட்டத்தில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் ஆற்றிய சிறப்புரை: நாட்டில் இத் திட்டம் புது அத்தியாயமாக விளங்கும். சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரமதர் நரேந்திர மோடி தனது உரையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை அறிவித்தார். அப்படி அவர் அறிவித்த 13 நாள்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் சேர்ந்து வங்கிக் கணக்கு தொடங்கிட மக்களும் ஆர்வம் காட்டிவருவது வரவேற்கத்தக்கது. வங்கிக் கணக்குத் தொடங்குவோருக்கு கடன் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பைக் காணும்போது திட்டம் முழு அளவில் வெற்றி பெறுவது உறுதி.

நாட்டில் 58.7 சதவிகிதம் பேர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் 97 சதவிகிதம் பேர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். ஆகவே, தமிழகத்தில் பிரதமர் நிதித் திட்டத்தில் 100 சதவிகிதம் வங்கிக் கணக்கை எட்டுவது எளிதானது என்றார். பின்னர், பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குத் தொடங்கியதற்கான ஆவணங்களையும் வழங்கினார்.

திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த நிகழ்வு அரங்கில் நேரடியாக காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

மதுரை மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல் இயக்குநர் ஏ.டி.எம்.ஷவாலி தமது உரையில், மதுரை மாவட்டத்தில் 41 பெரிய வங்கிகளில் 430 கிளைகள் மூலம் முதல் நாளிலே 39 ஆயிரம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

மாவட்ட வங்கி வளர்ச்சி ஆலோசனைக் குழுத் தலைவரும், ஆட்சியருமான எல்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வங்கிகளின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டன.

ஆதார் அடையாள அட்டை மற்றும் குறிப்பிட்ட சான்று அடிப்படையில் வங்கிக் கணக்கு தொடங்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...