அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 94.58 லட்சமாகும்.
வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அவர்களுக்கு வேலை வழங்க அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி பெற்று வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 8.59 லட்சமாகும்.
இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று வேலைக்குக் காத்திருப்போரின் எண்ணிக்கை 3.51 லட்சமாகும்.
2004-ஆம் ஆண்டில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 13 லட்சத்துக்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், தற்போது இது 10 லட்சத்துக்கும் கீழாக குறைந்து விட்டது.
எனவே, அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பவும், பெருமளவில் புதிய பணியிடங்களை ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை தனியார் மூலம் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்