எம்.பி.பி.எஸ்., படிப்பில், குறைந்தபட்ச வயது வரம்பை தளர்த்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பில், அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டதா என தெரிவிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் உள்ள, கிழக்கு கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் தாக்கல் செய்த மனு: என் மகன், ராமானுஜம், பிளஸ் 2 தேர்வில், 1,101 மதிப்பெண் பெற்றான். 194.50, கட் ஆப் மதிப்பெண் உள்ளது.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தான். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன். தகுதி பட்டியலில் என் மகன் பெயர் இடம் பெறவில்லை. விசாரித்தபோது, 17 வயது பூர்த்தியாகாததால் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 27 நாட்கள் குறைவாக இருந்ததால் சேர முடியவில்லை. டிசம்பர் 31ம் தேதியன்று 17 வயதை பூர்த்தி செய்தவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்துள்ளது. வயது வரம்பை தளர்த்த, மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது.
மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது. அதில், கலந்து கொள்ள என் மகனை அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பை தளர்த்தி, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி ராமசுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க, தேர்வுக் குழு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்.
மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாக கூடுதல் அரசு பிளீடர் தெரிவித்தார். ஆனால், மனுதாரரின் வழக்கறிஞர் அதை மறுத்துள்ளார்.
எனவே, மருத்துவப் படிப்பில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதா என மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு, பதிலளிக்க வேண்டும். விசாரணை வரும் 8ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டார்.