5,000 தமிழ் சொற்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி!

தொடக்கக்கல்வி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த 5,000 தமிழ் சொற்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில்
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த தொடக்கக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வசிப்புத் திறனை மேம்படுத்த தமிழில் 5000 வார்த்தைகளையும், ஆங்கிலத்தில் 600 வார்த்தைகளையும் கற்பிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கல்வி மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தை சரளமாக படிக்க கடந்த ஆண்டு ஆசிரியர்கள் 200 சொற்களை கற்றுக் கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.

மேலும், அதற்கான கையோட்டினைத் தயாரித்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கல்வித்தரம் 17 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்தது. இவற்றை மேலும் அதிகரிக்க, இந்தாண்டு ஆங்கிலத்தில் 400 வார்த்தைகளையும், தமிழ்ப் பாடத்தில் 5000 வார்த்தைளையும் தயார் செய்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 5000 தமிழ் வார்த்தைகளைக் கொண்ட புத்தகத்தை அரசு இலவசமாக, ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...