நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றாத அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பின்பற்றாத அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு பொதுநல வழக்குகள் மையத்தின் நிர்வாக மேலாளர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதனால், நீதிமன்றத்தின் பொன்னான நேரம் விரயமாகிறது.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றினால் இதுபோன்ற கால விரயமும், நிலுவை வழக்குகள் அதிகமாவதையும் தடுக்க முடியும். எனவே, நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்ற அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கூறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆண்டுதோறும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி இருந்தால், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்காது.

எனவே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு தலைமைச் செயலர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என அனைத்துத் துறைகளுக்கும் தேவையான சுற்றறிக்கையை தலைமைச் செயலர் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்தாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், நிர்வாக ரீதியாக மட்டுமில்லாமல் நீதிமன்றத்தின் தேவையற்ற சுமைகளும் குறையும். எனவே, ஒரு மாதத்துக்குள் தேவையான சுற்றறிக்கையைத் தலைமைச் செயலர் அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...