பரிசோதனைக்கூடத்தில் தவளை, ஓணான் உள்ளிட்ட எந்த விலங்குகளையும் அறுத்து படிப்பதை நிறுத்தவேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
விலங்குகள்
இந்தியாவில் விலங்கியல் மற்றும் உயிர் அறிவியல் படிப்புகள் கடந்த 92 வருடங்களுக்கு முன்பே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உள்ளன. தவளை, எலி, ஓணான், கரப்பான் பூச்சி உள்ளிட்ட ஏராளமான விலங்குகளை பிடித்து மயக்க மருந்து செலுத்தி அவற்றுக்கு மயக்கம் ஏற்படுத்தி மயக்க நிலையில் இருக்கும் போது அதன் உடல்பாகங்களை தெரிந்துகொள்வதற்காக அவற்றை அறுத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் காண்பிப்பார்கள்.
அவ்வாறு அறுத்து பார்ப்பதால் விலங்குகள் வதைக்கப்படுகின்றன. துன்பப்படுத்தப்படுகின்றன என்று மத்திய மந்திரியான மேனகா காந்தியின் பிராணிகள் வதை தடுப்பு சங்கம், பிராணிகள் பாதுகாப்பு மக்கள் அமைப்பு (பீட்டா) பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன.
இதையொட்டி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விலங்குகளை அறுத்து செய்முறை பயிற்சி எடுப்பதை நிறுத்தவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளன.
அந்த அறிக்கையில்கூறியிருப்பதாவது:-
அறுக்கக்கூடாது
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பரிசோதனைக்கூடங்களில் அறுத்துப்பார்க்கப்படும் விலங்குள் ஒருகோடியே 90 லட்சம் ஆகும். இவற்றை அறுத்து படிக்காமல் இருந்தால் இந்த விலங்குள் அனைத்தும் கொல்வது தடுக்கப்படுகிறது. பரீட்சாத்தமாக செய்முறை வகுப்புகளில் விலங்குகளை அறுப்பதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.
மாறாக விலங்குகள் அறுப்பதை வீடியோ படத்தில் காண்பிக்கவேண்டும். அவை இணையதளத்தில் இருக்கும். அதை பயன்படுத்தவேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விலங்குகளை அறுத்து பயன்படுத்தாமல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கற்பிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.