முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பில் 14 வயது வரையிலான பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரை மாவட்டம்,
கரிசல்குளத்தைச் சேர்ந்த எம்.விஜயகுமார் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
மனுவில், 14 வயது வரையிலான சிறுவர்கள் பாதுகாப்பில் அரசுகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உரிமைகளைப் பாதிக்கும் செயல்களை அனுமதிக்கக் கூடாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் வரவேற்பு நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி குழந்தைகள் 50 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த குழந்தைகள் வகுப்பு நேரத்தில் அழைத்து வரப்பட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இவ்வாறு குழந்தைகளை
ஈடுபடுத்துவது குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, வரவேற்பில் குழந்தைகளை பங்கேற்கச் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி துணைவேந்தர், பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளிலும் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்