அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரி கல்வித்துறையின்
கீழ் செயல்படும் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர் என்ற பிரிவின் கீழ், தையல் ஆசிரியர், பாட்டு ஆசிரியர், ஓவிய ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்கள் முழுமையாக பணியாற்றி வந்துள்ளனர். தற்போது, மிக சொற்ப எண்ணிக்கையிலேயே சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிந்த வருகின்றனர்.

ஓய்வுபெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதியதாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். உதாரணத்திற்கு, தையல் ஆசிரியர்களுக்கான 108 இடங்களில், தற்போது 80 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், 40 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

புதுச்சேரியிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் 300 என கண்டறியப் பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள், 8 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பபடாமல் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் எதிர்காலத்தில் சுயதொழில் ஒன்றை கற்றுக்கொள்ளும் அடிப்படையில், தையல், ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் சுயதொழிலை கற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும், நாள்தோறும் மொத்தமுள்ள 7 வகுப்புகளில் (பீரியடு), ஒரு வகுப்பு ஓவியம், தையல் பயிற்சி, இசை (பாட்டு உள்ளிட்ட) என எதாவது ஒன்று, சிறப்பு ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும். தற்போது பல பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் இல்லாதாதல், குறிப்பிட்ட வகுப்புகளில் மாணவர்கள் ஒன்றும் கற்றுக் கொள்ளாமல் வீணாக உட்கார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, மாணவர்களுக்கு ஓவியம், தையல், பாட்டு உள்ளிட்டவைகளை கற்றுக் கொடுக்கின்றனர்.

தற்போதுள்ள சமச்சீர் கல்வி முறையில், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சிறப்பு மதிப்பெண் வழங்கப்படுகிறது. குறிப்பாக, செய்முறைத் தேர்விற்கு 40 சதவீத மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த செய்முறை தேர்விற்கு அடிப்படை ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சிறப்பு ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். ஆனால், புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...