குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட வேண்டும்: யுனிசெஃப்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட வேண்டும் என்று யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஏ.வித்யாசாகர் பேசினார்.

பாரதியார்
பல்கலைக்கழக சமூகப் பணியியல் துறை, தமிழ்நாடு தன்னார்வ சுகாதார அமைப்பு, யுனிசெஃப் அமைப்பு சார்பில், "குழந்தைகளுக்கு எதிரான தீங்குகள், சவால்கள்' குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கை சமூக நலப் பாதுகாப்பு துறை இணை இயக்குநர் எஸ்.சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

இதில், யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.வித்யாசாகர் பேசியது:

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இக் குற்றங்களை ஒழிக்க போதிய சட்டங்கள் இருந்தும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெளியே நடப்பதைவிட குடும்ப உறுப்பினர்களால்தான் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, குடும்பத்தினருடன் எப்படிப் பழகுவது என்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சமூகம், குடும்பம், பள்ளி, ஆசிரியர், அரசு, ஊடகம், காவல் துறை என ஒருமித்த செயல்பாடு மூலமாகவே ஒழிக்க முடியும். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க அனைவரிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். மேலும், குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகள், பள்ளிகள் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

பாரதியார் பல்கலைக்கழக சமூகப் பணியியல் துறைத் தலைவர் ஏ.சேதுராம சுப்பையா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.சங்கரநாராயணன், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...