ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த காரணத்தால் தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு இலவச "அட்லஸ்' புத்தகங்கள், வகுப்பறைகளுக்கான வரைபடங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிகழ் கல்வியாண்டில் (2014-15) அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக "அட்லஸ்' புத்தகங்களை ஜூலை மாதத்துக்குள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த காரணத்தால் "அட்லஸ்' புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது தாமதமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள் கூறியது: இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் எந்தவொரு வரைபடத்துக்கும் இந்திய தலைமை நில அளவையாளர் அலுவலகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்தாலும், இதுதொடர்பாக மத்திய அரசின் அரசிதழில் இன்னமும் வெளியிடப்படவில்லை. எனவே, தெலங்கானா, புதிய ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் எல்லைகளை வரையறுத்து அதிகாரப்பூர்வமாக வரைபடம் வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் அரசிதழில் தெலங்கானா மாநிலம் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு, "அட்லஸ்' புத்தகத்தில் உள்ள இந்திய நில வரைபடத்துக்கான அனுமதி கிடைக்கும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில் "அட்லஸ்' புத்தகங்கள் அச்சிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு காரணங்களால் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு பயின்ற சுமார் 11.85 லட்சம் மாணவர்களுக்கும் "அட்லஸ்' வரைபடம் வழங்கப்படவில்லை. இந்த "அட்லஸ்' புத்தகங்களை அச்சிடுவதற்கான அனுமதி சில மாதங்களுக்கு முன்னதாகக் கிடைத்தது. இருந்தாலும், இந்த ஆண்டு ஏழாம் வகுப்பில் பயிலும் அந்த மாணவர்களுக்கு முழுமையான ஆந்திரப் பிரதேசமும், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தெலங்கானா, புதிய ஆந்திரப் பிரதேச மாநிலமும் கொண்ட "அட்லஸ்' புத்தகங்கள் வழங்க வேண்டியிருக்கும் என்பதால், இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் மொத்தமாக புதிய "அட்லஸ்' புத்தகம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரைபடங்கள் வழங்குவதும் தாமதம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1.48 லட்சம் வகுப்பறைகளுக்கு இந்திய, தமிழக வரைபடங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதிலும் ஆந்திரப் பிரிவினை காரணமாக இந்திய வரைபடங்களுக்கான அனுமதி இந்திய தலைமை நில அளவையாளர் அலுவலகத்திடம் இருந்து இன்னமும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், தமிழக, மாவட்ட வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழக, மாவட்ட வரைபடங்களில் சிறிய அளவிலான திருத்தங்கள் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தத் திருத்தங்களுக்குப் பிறகு வகுப்பறைகளுக்கு முதல்கட்டமாக தமிழக, மாவட்ட வரைபடங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வியியல் பணிகள் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.