தமிழக அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரை, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையின் இணைவேந்தராக்கும் வகையில், சட்டப் பேரவையில்,
சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: பொதுவாக, மாநிலத்திலுள்ள அரசு பல்கலைகளின் இணைவேந்தராக, மாநில உயர்கல்வித் துறைஅமைச்சர் இருப்பார். உயர்கல்வித் துறையின் செயலாளர், நிதிக்குழு உறுப்பினராக உள்ளார்.
ஆனால், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் கீழ் உள்ளது. எனவேதான், அத்துறை அமைச்சரை, இப்பல்கலையின் இணைவேந்தராக்கவும், அத்துறை செயலாளரை, பல்கலை குழு உறுப்பினராக்கவும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.