கண்ணீரில் தவிக்கும் TNTET தேர்வாளர்கள்

கடந்தவருடம் 17.8.2013, 18.8.2013 அன்று ஆசிரியர் தகுதிதேர்வு என்னும் கபடநாடகம் அரங்கேற்றம் நடைபெற்று இன்று முன்னனி நடிகர்களின் திரைப்பட வெற்றிவிழாவினையும் முறியடித்து முடிவே இல்லாத தொடர்கதையாக ஓடிக்கொண்டிருக்கிறது....

TETதேர்வில் சாதனை படைத்து மாணவர்களுக்கு
போதனை செய்யும் ஆசிரியராகிய எங்களுக்கு நேரிட்ட சோதனை....

ஐயகோ அது சொல்லமுடியாத நரகவேதனை.....ஒரு சிசு இந்த உலகில் குழந்தையாக பிறக்க பத்து மாதம் கருவறையில் தவம் செய்கின்றன...

நாங்களோ இந்த உலகில் அரசு ஆசிரியராக பிறக்க பல மாதங்களாய் இருட்டறையில் சாவாத சவமாய் இருக்கிறோம்.....

எங்களின் கஷ்டங்களை வைத்து சில நாளிதழ்கள் முரணான செய்திகள் வெளியிட்டு பணம் கல்லா கட்டியது....

ஆனால் ஆசிரியராகிய எங்களின் இதயத்தையோ முள்ளாய் குத்தியது.....

பாலிமர் டிவி செய்தி:TNTET பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் இன்று  வெள்ளிக்கிழமை (01.08.2014)வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் நாளிதழ் செய்தி:ஆசிரியர் தகுதி தேர்வு  தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாகவும்அதற்கான தேர்வுப்பட்டியல் இன்று(01.08.2014) பிற்பகல் வெளியிடப்படும் என்றும்கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றன....

தினமணி நாளிதழ் செய்தி:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளது.தேர்வுப் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அநேகமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கண்ட பொய்யான தகவலை கூறும் அந்த கல்வி வட்டாரங்கள் யார்???...நாளிதழ்களுக்கு புரளி செய்தி கொடுக்கும் அந்த கல்விஅலுவலர் தான் யார்???அவருக்கு பெயரே கிடையாதா???நண்பர்களே நம்மை கஷ்டப்படுத்திப்பார்க்க அந்த கல்வித்துறை வட்டாரங்களுக்கு அப்படிஎன்ன ஆனந்தம்....

இந்த நாளிதழ்களையும் சில ஊடகங்களையும் நம்பி 01.08.2014 வெள்ளிக்கிழமை காலை முதலே தேர்வுப்பட்டியல் காலை வரும், மதியம் வரும், மாலை வரும், இரவு 7.30க்கு வரும், நடுஇரவு வரும் என காத்திருந்த எங்களுக்கு கண் எரிச்சல் தான் வந்தது....

TET தேர்வினை நினைதாலே வயிற்றெரிச்சல் தான் வருகிறது....அக்கினி சூரியனையும் தாண்டி விட்டது ஆசிரியராகிய எங்களின் வயிற்றெரிச்சல்....

அரசே, பள்ளிக்கல்வித்துறையே, அசிரியர் தேர்வுவாரிய அலுவலர்கள் அவர்களே இனிமேலாவது தாமாகவே முன்வந்து உறுதியான தகவலை ஊடகங்களுக்கு தாருங்கள் என 72,711 ஆசிரியர்களும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.....


By
P.Rajalingam...
Puliangudi...Tirunelveli...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...