தமிழகத்தில் 11ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க நமது இயக்க பொறுப்பாளர்கள் 10.09.2014 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார் ,அதனை ஏற்ற இயக்குனர் ஐயா!!!அதற்கான உடனடியாக நடவடிக்கை
மேற்கொண்டு அதற்கு வழிமுறைகளையும் தற்போது இந்த விபரங்கள் உள்ளன C.E.O.A அவர்களை தொடர்பு கொள்ள செய்தார் அங்கு நமது பொறுப்பாளர்கள் நேரில் சென்று பணிகளை கேட்டறிந்து விரைவாக ஒப்புகை சீட்டு வழங்க கேட்டனர் தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்தது கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அனைத்து ஆசிரியர்களும் வழங்கப்படும்.இதற்கு உதவிய பத்திரிகை மற்றும் cps ஐ மாற்ற போராடும் நண்பர்களும் மாற்று இயக்கத்தினருக்கும் மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA வின் மனமார்ந்த நன்றி..