தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் செந்தமிழ் வாரம் கொண்டாட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் செந்தமிழ் வார விழா கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியது:

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சம்ஸ்கிருத வார விழா கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளில் ஒரு மொழியை மட்டும் மையப்படுத்துவது மற்ற மொழியைச் சேர்ந்த மக்களின் மனதைப் புண்படுத்தும்.

தமிழகத்தில் நீதிமன்றம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய மூன்றிலும் தமிழை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குரு உத்சவ், சம்ஸ்கிருத வார விழா ஆகிய உத்தரவுகளை தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசியது: இந்தியாவில் வெறும் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக இருக்கும் சம்ஸ்கிருதத்துக்கு வார விழா கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தும்போது, கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கும் வார விழா கொண்டாட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

இதில் திராவிடர் கழக கட்சியின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலர் ராஜ்மோகன், வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...