2பணியிடத்தில் 3ஆசிரியர்கள் நியமனம்!!!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது நியமன ஆணைகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.


அந்த உத்தரவுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் பணியில் சேர சென்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 2 பணியிடம் காலியாக உள்ள
பள்ளிக்கு, 3 ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது. இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர் அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...